மயக்கம் என்ன திரை விமர்சனம்

படம் : மயக்கம் என்ன

நடிப்பு : பதனுஷ் , ரிச்சா கங்கோபதி, மற்றும்
பலர்

இசை : ஜி .வி பிரகாஸ்

இயக்கம் : செல்வராகவன்

தயாரிப்பு : ஜெமினி பிலிம் சர்கிட்


"காதல் கொண்டேன்", "புதுப்பேட்டை" ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து தனுஷ்வை வைத்து செல்வராகவன் இயக்கும் 3வது படம் "மயக்கம் என்ன". தனுஷ்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரிச்சா தமிழில் அறிமுகமாகிறார். அடுத்த தலைமுறையினர் பற்றியும், அவர்களின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் "மயக்கம் என்ன", முழுக்க முழுக்க இளைய தலைமுறையினரை மையப்படுத்தி இருக்கும். படத்தின் கதை மொத்தம், தனுஷ், ரிச்சா இருவரை மையம் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது.

ஏ.யூ.எம். புரொடக்சன்ஸ் தயாரிக்க, கதை, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் செல்வராகவன். கூடவே படத்தில் 2பாடல்களையும் எழுதியுள்ளார். செல்வராகவனுடன், தனுஷூம் 2 பாடல்கள் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோலாபாஸ்கர் படத்தொகுப்பு வேலையை ‌கவனித்துள்ளார்.

மேற்கத்திய இசையையும், கிராமிய இசையையும் கலந்துகட்டி ஒரு காக்டெயிலாக படைத்திருக்கிறார் ஜிவி. நரேஷின் உற்சாகமான குரலுடன் பயணிக்கும் பாடலின் இடையே ஒரே ஒரு வரிக்காக வழி மரிக்கிறது ஒரு பெண்குரல், அந்த இடம் அருமை. பாடியவர் யாரென்று தெரியவில்லை. (சைந்தவி...?) ஆயிரத்தில் ஒருவன் மாலை நேரம் பாடலைப் போல ஆகிவிடக்கூடாது.
mayakkam enna movie review

தனுஷ் நல்ல நடிப்பு தான்..அண்ணன் படம் என்பதால் அடக்கியே வாசிச்சிருக்காரு..

ஹீரோயின் ரிச்சா முதல்ல பார்க்கும்போது சாதாரணமா தெரிஞ்சது..போகப்போக ‘நல்ல ஃபிகரா’ தெரிய ஆரம்பிச்சுடுச்சு..நல்லா முகத்துல எக்ஸ்பிரசன்ஸ் காட்டுது..அழகான கண்கள்..அகலமான முதுகுன்னு நல்லவொரு அறிமுகம்.


ஜி.வி.பிரகாஷ் அருமையா டியூன் போட்டிருக்கார்..பிண்ணனி இசையும் நல்லா இருந்துச்சு..குறிப்பா ‘வெண்ணிலவே’ பாட்டுக்கு குடிச்சுட்டு மாக்கான் - ரிச்சா - தனுஷ் ஆடி முடிக்கவும் வந்த பிண்ணனி இசை.

அடுத்து ராம்ஜியின் ஒளிப்பதிவு..படமே ஃபோட்டோகிராஃப்ர் பத்தின படம் என்பதால் கேரளா-கர்நாடகான்னு அழகான லொகேசனா தேடி எடுத்திருக்காங்க.

செல்வராகவன் ஏமாற்றவில்லை; எதிர்பார்ப்பை எகிறவைக்கும் இயக்குனர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் செல்வராகவன் தன் மீதிருந்த எதிர்பார்ப்பை மிகத் திருப்தியாக பூர்த்திசெய்துள்ளார். மாறுபட்ட கதைக்களம், நேர்த்தியான & குழப்பமில்லாத திரைக்கதை, செல்வாவின் டிப்பிக்கல் டச் என 'மயக்கம் என்ன' செல்வாவின் மற்றுமொரு திரைவிருந்து. திரைப்படத்தில் தனுஸ் கேரக்டரை அவ்வப்போது Genius என்று அழைப்பார்கள், மயக்கம் என்னவை பார்த்த பின்னர் எனக்கு தோன்றியது; செல்வராகவன் - Genius. ஆயிரத்தில் ஒருவனில் குழப்பமான திரைக்கதை மூலம் செல்வராகவன் விட்ட தவறை 'மயக்கம் என்ன'வில் சரிப்படுத்தியுள்ளார். படம் அதிக வேகம் என்று சொல்லமுடியாவிட்டாலும் மெதுவாக நகர்கின்றது என்றும் சொல்ல முடியாது, எந்த இடத்திலும் திரைக்கதையில் தொய்வில்லை.


மாறுபட்ட சினிமாவை, தரமான சினிமாவை கொடுப்பதில் செல்வராகவன் வெற்றி கண்டுள்ளார்; உங்களுக்கும் மாறுபட்ட, தரமான சினிமாவை பார்க்க விருப்பமா? 'மயக்கம் என்ன' நிச்சயம் உங்களை திருப்திப்படுத்தும். "இல்லை நான் மசாலா மட்டும்தான் பார்ப்பேன்" என்பவரா நீங்கள்! தயவுசெய்து திரையரங்கு செல்லாதீர்கள்; அங்கு சென்று படம் பார்ப்பவர்களையும் சத்தம் போட்டு குழப்பாதீர்கள்(இன்றைய அனுபவம்). இது ஏதாவதொரு உலக சினிமாவின் சாயலா! என்றெல்லாம் எனக்கு தெரியாது, அப்படி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை; 'எனக்கு மயக்கம்' என்ன மிகவும் பிடித்துள்ளது. செல்வாவின் முன்னைய படங்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் 'மயக்கம் என்ன'வும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.......

மயக்கம் என்ன - நிச்சயமாக உங்களை மயக்கும் ( நீங்கள் மாற்று சினிமாவை விரும்பினால் )



Post Comment

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP