யாழில் நிலக்கண்ணிவெடி வெடித்ததில் 3 இளைஞர்கள் படுகாயம்
யாழ்ப்பாணத்தில் உள்ள அரியாலைப் பகுதியில் மக்களை மீளக் குடியமர்வதற்காக என சிறிலங்கா தரைப்படையினர் அனுமதித்த பகுதியில் நிலக்கணிவெடி ஒன்று வெடித்ததில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர்.
அரியாலைக்கும் கொழும்புத்துறைக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணியவில் இச்சம்பவம் இடம்பெற்றது.
படுகாயமடைந்த மூன்று இளைஞர்களும் யாழ். மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உழவூர்தி ஒன்றில் மணலை ஏற்றிக்கொண்டு வரும்போதே அந்தப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் ஜூட் வில்சன் (வயது 21), சி.சுதர்சன் (வயது 22) மற்றும் ரி.சுஜந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் கொழும்புத்துறை மற்றும் அரியாலைப் பகுதிகளைச் சோ்ந்தவர்கள் ஆவர்.
சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிகளில் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளதாகவும், மக்கள் அச்சம் இன்றி மீள்குடியேற முடியும் எனவும் சிறிலங்கா அரசு அறிவித்திருந்த நிலையிலேயே பொதுமக்கள் அப்பகுதிகளில் குடியேற முன்வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது