நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு பிரபுதேவாவுடன் நயன்தாரா திருமணம்?


நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றும், திருமணத்துக்குப்பின், நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் என்றும் மும்பை வட்டாரங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் இருந்து வருகிறது. இருவரும் திருமணம் வரை நெருங்கிவிட்டதாக தமிழ் தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பிரபுதேவாவுக்கு ரமலத் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். ரமலத்தும், பிரபுதேவாவும் காதலித்து ரகசியமாக திருமணம் செய்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் கணவர் பிரபுதேவா, நயன்தாராவுடன் உறவு வைத்திருப்பதற்கு ரமலத் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவருடைய எதிர்ப்பையும் மீறி, நயன்தாராவும், பிரபுதேவாவும் கணவன் மனைவி போல் ரகசியமாக குடும்பம் நடத்தி வருகிறார்கள். இருவரும் ஒரே ஓட்டலில், ஒரே அறையில் தங்குகிறார்கள்.

இந்நிலையில், பிரபுதேவா டைரக்டு செய்துள்ள வான்டட் என்ற இந்தி படத்தின் சிறப்பு காட்சிக்கு நயன்தாராவும், பிரபுதேவாவும் ஜோடியாக வந்தார்கள். மற்ற நடிகர் நடிகைகளும் அந்த காட்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.

படம் முடிந்ததும், இருவரும் ஜோடியாக வெளியே வந்தார்கள். உடனே அவர்களை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டார்கள்.

இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்களா? என்றும், திருமணத்துக்குப்பின் நடிப்பீர்களா?'' என்றும் நயன்தாராவிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள்.

நோ கமெண்ட்ஸ் என்று நயன்தாராவும், பிரபுதேவாவும் சேர்ந்து பதில் அளித்தார்கள்.

இதைத்தொடர்ந்து மும்பை பத்திரிகைகள், நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றும், திருமணத்துக்குப்பின், நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் என்றும் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்த தகவல்களை உறுதிபடுத்துவதுபோல், நயன்தாராவின் சமீபகால நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

தமிழ் தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் கவர்ச்சியாக நடித்து வந்த அவர், சமீபகாலமாக கவர்ச்சியாக நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

அவர் இப்போது, அதுர்ப்' (அடக்க முடியாதவன்) என்ற தெலுங்கு படத்தில், ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை வி.வி.வினாயக் டைரக்டு செய்கிறார். தெலுங்கு பட உலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவரான இவர்தான், நயன்தாராவை தெலுங்கு பட உலகில் அறிமுகம் செய்தார்.

அதுர்ப்' படத்தில், ஒரு கவர்ச்சியான உடையை அணிந்து நடிக்கும்படி, நயன்தாராவிடம் டைரக்டர் வி.வி.வினாயக் கூறினார். அந்த உடையை அணிந்து நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டார்.

இதைவிட கவர்ச்சியான உடைகளில் நீ நடித்து இருக்கிறாயே? என்று டைரக்டர் வி.வி.வினாயக், நயன்தாராவிடம் கேட்டார். இப்போது, அப்படி நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்து இருக்கிறேன் என்று நயன்தாரா பதில் அளித்தார்.

நயன்தாராவின் இந்த திடீர் முடிவு, தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இனிமேல் கவர்ச்சியாக நடிக்கக்கூடாது என்று பிரபுதேவா சொன்னதன்பேரில்தான், நயன்தாரா கவர்ச்சியாக நடிக்க மறுக்கிறார் என்று பேசப்படுகிறது.

.



Post Comment

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP