கிளிநொச்சியில் வெடித்தது குண்டு


இன்று காலை கிளிநொச்சியில் உள்ள இராணுவத்தினரின் 58 வது படைப்பிரிவின் முகாமில் பாரிய குண்டுச் சத்தங்கள் கேட்டிருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியாகக் கேட்ட இக் கூண்டுவெடிப்பால் கிளிநொச்சி அதிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் தற்போது கிடைக்கப்பெறவில்லை.


இருப்பினும் இலங்கை அரசானது சற்று மாறுதலாக தமது ஆயுதக் களஞ்சியம் வெடித்தது என்று கூறாமல், புலிகளிடம் கைப்பற்றி வைத்திருந்த ஆயுதம் அடங்கிய கண்டெய்னரே (கொள்கலன்) இவ்வாறு வெடிப்புக்கு உள்ளாகியுள்ளதாகக் கூறியிருக்கிறது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் எத்தனை இராணுவத்தினர் காயமடைந்தனர் என அரசாங்கத்தரப்பு கூற மறுத்துள்ளது.

இருப்பினும், கண்டெய்னரை திறக்கும் முறையை சரிவர கையாளாவிட்டால் அதில் பொருத்தப்பட்டிருக்கும் குண்டு தானாக இயங்கி கண்டெய்னரை அழிக்கும் வகையில் புலிகள் இதனை வடிவமைத்திருக்கலாம் என விடையம் அறிந்த வட்டாரங்கள் எமக்கு தெரிவித்துள்ளனர்.எவ்வாறாயினும் திடீர் என்று வெடித்த இந்த குண்டு சம்பவத்தால் படையினர் கதி கலங்கி போய் உள்ளனர் .(படத்தில் இருப்பது இன்றைய குண்டு வெடிப்புச் சம்பவத்தின் புகைப்படம் அல்ல )



Post Comment

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP