நடந்தது என்ன? நடிகைகளின் ஆவேசம் நியாயம்தானா?


நடிகை புவனேஸ்வரியை விபசார வழக்கில் போலீஸ் கைது செய்துள்ளது. அவர் போலீசாரிடம் மேலும் சில நடிகைகள் பற்றி அவதூறாக வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளியாயின.
 
இதனால் நடிகர், நடிகைகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி முதலமைச்சர் கருணாநிதிக்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் 
ராதாரவி கடிதம் அனுப்பினார்.

அதில் விபசார வழக்கில் கைதான புவனேஸ்வரி போலீசில் தெரிவித்ததாக முன்னணி நடிகைகள் பற்றிய அவதூறு செய்தியால் 
அதிர்ச்சி அடைந்தோம்.

சம்பந்தப்பட்ட நடிகைகளும், அவர்களின் குடும்பத்தினரும் ஒட்டுமொத்தமாக தென்னிந்திய நடிகர் சங்க
உறுப்பினர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர், நடிகைகள் இன்று நடிகர் சங்கத்தில் கூடினார்கள். நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் தலைமையில் 
அவசர கூட்டம் நடத்தினார்கள்.

நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, புவனேஸ்வரி வாக்குமூலத்தில் தெரிவித்ததாக அவதூறு கூறப்பட்ட நடிகைகள் 
மஞ்சுளா, நளினி, ஸ்ரீப்ரியா, சீதா, அஞ்சு ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். நமீதா, ஷகிலா இருவரும் வெளியூர் படப்பிடிப்பில்இருந்ததால் வரவில்லை.
 
நடிகர்கள் முரளி, பெஞ்சமின், மயில்சாமி, சின்னி ஜெயந்த், நடிகைகள் குயிலி, பாத்திமா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புவனேஸ்வரி கைது தொடர்பாக நடிகைகள் பற்றி வெளியான செய்திக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வருகிற 7
-ந்தேதி நடிகர் சங்கத்தில் கண்டன கூட்டம் நடத்துவது என்றும், நடிகர்- நடிகைகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பின்னர் சரத்குமார் தலைமையில் அனைவரும் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் 
மனு அளித்தார்கள். தங்களை பற்றி அவதூறாக செய்தி வந்திருப்பதாக மஞ்சுளா, நளினி, சீதா, ஸ்ரீப்ரியா, அஞ்சு ஆகியோர்கமிஷனரிடம் ஆவேசப்பட்டு பேசினார்கள். 25 நிமிடம் கமிஷனரிடம் பேசினார்கள்.

இச்சந்திப்பு முடிந்து வெளியே வந்த சரத்குமார் நிருபர்களிடம், நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் குறித்து

அவதூறான செய்திகள் வெளிவந்தது. புவனேஸ்வரி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இதுபோன்ற செய்திகள் வந்துள்ளதாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக இன்று போலீஸ் கமிஷனரை சந்தித்து கேட்டோம். அதற்கு பதில் அளித்த அவர் இதுபோன்று எந்தவிதமான 
வாக்குமூலமும் புவனேஸ்வரி அளிக்கவில்லை என்று கூறினார். இதுதொடர்பாக போலீசிடம் எந்தவித ஆதாரமும் இல்லை என்று கமிஷனர் தெரிவித்தார்.

இதை வைத்து பார்க்கும்போது யூகத்தின் அடிப்படையிலேயே நடிகைகள் பற்றி செய்தி வெளியாகி இருப்பது தெரிகிறது. எனவே 
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வருகிற 7-ந்தேதி மாலை 6 மணிக்கு நடிகர் சங்க வளாகத்தில் கண்டன கூட்டம் நடத்தஉள்ளோம்.

மேலும் பாதிக்கப்பட்ட நடிகைகள் தனித்தனியாக தங்கள் வக்கீல்களுடன் கலந்து ஆலோசித்து மானநஷ்ட வழக்கு தொடரவும் 
முடிவு செய்துள்ளனர். நடிகைகள் பற்றி இதுபோன்ற அவதூறு செய்திகள் வெளியிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாது’’என்று கூறினார்.

உண்மையில் புவனேஸ்வரி கைதுக்கு பின்பு நடந்தது என்ன?நடிகைகளின் ஆவேசம் நியாம்தானா என்பது விரைவில் 
தெரியவரும்




Post Comment

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP