நித்தியானந்தா புலிகளுக்கு பணம் கொடுத்தாரா என்றும் விசாரணையாம்
தன்னிடம் வரும் பக்தைகளுடன் ஒப்பந்தம் போட்டு பாலுறவில் ஈடுபட்ட நித்தியானந்த சாமியாரைக் கைதுசெய்துள்ள பெங்களூர் போலீசார் இப்போது அவரை விசாரணைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர். நித்தியானந்தாவுக்கு அமெரிக்காவிலும் பல ஆச்சிரமங்கள், சொத்துக்கள் மற்றும் பக்தர்கள் உள்ளமை தெரிந்த விடயமே. கைதாகியுள்ள நித்தியானந்தா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதியனுப்பினாரா என்ற கோணத்திலும் சந்தேகப் பார்வை பார்க்கப்படுகிறாராம் என செய்திகள் கூறுகின்றன.
பெங்களூர் போலீஸ் அவரை விசாரணை செய்துவந்தாலும்கூட, அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம் ஒன்று இவ்விசாரணைகளின் போக்குக் குறித்து அடிக்கடி அறிந்துவருகின்றதாம். நித்தியானந்தாவின் ஆச்சிரமம், தியான பீடம் ஆகியவற்றின் நிதிகள் குறித்துத் தனது கவனத்தை வைத்துள்ள இந்த அமெரிக்க நிறுவனமே ஒரு தேவையும் இல்லாமல் இந்த விடயத்தை விடுதலைப் புலிகளுடனும் முடிச்சுப் போடுகிறதாம்.
இந்தியாவில் என்ன குற்றச் செயல் நடந்தாலும் அதில் புலிகளையும் இணைத்துப் பேசாவிடின் இந்திய அரசுக்கு அது செமிக்காது. தற்போது அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம் ஒன்று புதிதாகத் தலைபோடுவதே புரியாத புதிராக உள்ளது என்கிறார்கள் புத்திஜீவிகள்.
Thanks athirvu.com