தேசிய தலைவர் பிரபாகரனின் வீடு தரை மட்டம்


இராணுவத்தால் தேசிய தலைவர் வாழ்ந்த வீடு இடித்து நொருக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அனைவரும் அறிந்த விடையம். பல வருடங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தாலும், இது வரை அவரது வீடு மீது கைவைக்கவில்லை. இருப்பினும் இப்போது பிரபாகரன் வீட்டை இடித்து நொருக்கியுள்ளமை, பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஒரு போராட்ட வரலாறை அப்படியே மூடி மறைப்பதற்க்கான விடையமே இதுவாகும்.

வீட்டை இடித்து நொருக்கிய இராணுவம், தமது காவலாளிகள் 3 வரை அங்கு பாதுகாப்பிற்கென அமர்த்தியது. அங்கு யாரும் சென்று புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இத் தடைகள் அனைத்தையும் மீறி ஒரு நபர் இதில் ஆர்வம்காட்டி இப் புகைப்படங்களை எடுத்து எமக்கு அனுப்பியுள்ளார். இலங்கை இராணுவத்திற்கு சவால் விடும் வகையில் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு பின்னர் ஒரு பிரபல அரசியல்வாதியூடாக அவை அனுப்பப்பட்டுள்ளது.

காலம் கனிந்து வரும்போது அவ் அரசியல்வாதி குறித்த விபரங்களை அதிர்வு இணையம் வெளியிடும். அதுவரை பொறுமைகாக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விஸ்வமடு மாவீரார் துயிலும் இல்லத்தை அகழ்ந்து அப்படியே கற்களை நொருக்கி சாலை அமைத்திருக்கிறார்கள் வன்னியில். அவ்வாறு அமைக்கப்பட்ட சாலைகள் ஓரத்தில் தலை முடி, எலும்புத் துண்டுகள், மாவீரரின் மண்டை ஓடுகள் என பல எச்சங்கள் காணப்படுகின்றன. இதை கிராம வாசிகள் அரசாங்க அதிபரிடம் முறையிட , அவரும் அதை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். இருப்பினும் சாலை ஓரத்தில் காணப்படும் எச்சங்களை மட்டும் அகற்றியுள்ளது இலங்கை இராணுவம்.

என்ன கொடுமை இது, ?? வேறு எந்த நாட்டிலாவது இதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? கிட்லர் கூட இவ்வாறு யூதமக்களை அவமானப்படுத்தியது இல்லையே .. ஆனால் மகிந்த அரசோ மாவீரர் துயிலும் இல்லங்களை, எமது தேசிய தலைவர் வாழ்ந்த வீட்டை இடித்து தனது இன வெறியை அரங்கேற்றி வருகிறது. சுயாட்சி வேண்டாம், ஈழம் வேண்டாம், மாநில ஆட்சி வேண்டாம், எமது புராதனச் சின்னத்தையாவது , எமது வரலாறையாவது அழித்தொழிக்க வேண்டாம் என சிங்களத்திற்கு ஏன் தமிழ் தேசிய கூடமைப்பு கூறவில்லை ?????

இன்னும் சமஷ்டி அரசியலுக்கு தயார் என முழங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கண்களுக்கு இது தெரியவில்லையா ? ஒரு புத்த சிலையை அழித்தால் சிறுபாண்மை கட்சியாக ஜே.வி.பி இருந்தால் கூட குரல் கொடுத்திருக்கும். அப்படி இருந்துகூட இன்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மொளனமாக இருந்து என்ன பிரியோசனம் ? எப்போது துணியப் போகிறார்கள் இவர்கள் ???

இப்படி மொளனமாக இருப்பவர்களை நாம் நம்பி என்ன பிரியோசனம் ??? இவர்களா தமிழர்களுக்கு ஒரு நல்ல தீர்வைப் பெற்றுத்தரப் போகிறார்கள் ???

Ltte's leader Pirabakaran's house has been demolished by srilankan goverment.
நன்றி athirvu.com



Post Comment

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP