யாழ்ப்பாணத்தில் காதல் கடத்தல் நாடகம்


யாழ் குடாநாட்டில் உள்ள பெற்றோர் தமது குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியில் சென்று திரும்பி வரும்வரை அச்ச உணர்வுடனேயே இருக்கின்றனர். தமது குழந்தைகளை யாராவது கடத்திச் சென்றுவிடுவார்களா என்று பயப்படும் அளவுக்கு அங்கு கடத்தல் என்பது மிகவும் மலிந்துள்ளது. இந்நிலையில் ஒரு காதல் ஜோடி தாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கடத்தப்பட்டுவிட்டதாக நாடகம் ஆடியுள்ளனர். யாழ். பிரதான வீதியில், தண்ணீர்த் தாங்கிக்கு அண்மையாக நேற்று நண்பகல் ஒரு மணியளவில் ஒரு இளம்பெண் கடத்தப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இத்தகவலை அடுத்து யாழ். நகரத் தளபதி மேஜர் நிசந்த தலைமையில் படையினர் தேடுதல் நடத்தி அப்பெண்ணை மீட்டுள்ளனர்.

உண்மையில் தேடுதலின் போது அப்பெண்ணும் அப்பெண்ணைக் கடத்தியதாகக் கூறப்படும் நபரும் ஜோடியாக ஓரிடத்தில் தங்கி இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டனர். இவர்களைக் காணவில்லை என்று கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலமாக இருந்த பரபரப்பின் முடிவில் தெரியவந்தது என்னவென்றால் இவர்கள் இருவரும் காதலர்கள் என்பதே. இந்த ஜோடி யாழ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளதாம்.
jaffna girl kidnapped drama , jaffna girl kidnapped



Post Comment

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP