புலிகளின் புதிய இராணுவப்பிரிவு உருவாகியுள்ளது: அ.கா.சட்டம் தொடரும்

விடுதலைப் புலிகள் அமைப்பில் புதிய இராணுவப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. புலிகளின் இந்த நடவடிக்கை காரணமாக அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் எனப் பிரதமர் டி.எம். ஜயரட்ண தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

விடுதலைப் புலிகள் அமைப்பில் புதிய இராணுவப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனிநாட்டை அமைக்கும் நோக்கில் இந்த இராணுவப் பிரிவை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். புலிகளின் இந்த நடவடிக்கை காரணமாக அவசர காலச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும். விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முதலாவது நினைவுதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு விடுதலைப்புலிகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என பிரதமர் மேலும் தெரிவித்தார். இதேவேளை அவசர காலச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டாலும் பயங்கரவாதத் தடைச்சட்டங்கள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலில் உள்ள அவசர காலச் சட்டத்தைப் போன்று புதிய பயங்கரவாதத் தடைச்சட்டங்களைக் காலத்திற்குக் காலம் நீடிக்க வேண்டிய அவசியமில்லை. அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் சாசனத்தில் இந்த விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்படும் என்றார். இருப்பினும் விடுதலைப் புலிகள் உருவாக்கியுள்ளதாகக் கூறப்படும் புதிய இராணுவக் கட்டமைப்பு உள்நாட்டிலா அல்லது வெளிநாட்டிலா இயங்க ஆரம்பித்திருக்கின்றது போன்ற தகவல்களை அவர் வெளியிடவில்லை.

இது ஒரு புறம் இருக்க , அவசரகாலச் சட்டத்தையும், பயங்கரவாத தடைச்சட்டத்தையும் மேலும் நீடிக்க இலங்கை அரசு கூறும் நொண்டிச்சாட்டே இவை என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
நன்றி athirvu.com
Srilankan goverment says stil there is a military group of tigers.



Post Comment

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP