மட்டக்களப்பில் இராவணன் திரையிட்ட சாந்தி திரையரங்கு தீவைப்பு

ராவணன் வெளியிட இலங்கையில் எதிர்ப்பு

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ராவணன் படத்தை வெளியிட இலங்கையில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா இம்மாதம் நடைப்பெற்றது. இந்த விழாவில் பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள தமிழர் அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இந்த போராட்டத்தின் எதிரொலியாக பிரபல நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐய்வர்யா ராய், ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழக நட்சத்திரங்கள் முற்றிலும் இலங்கை பயணத்தை தவிர்த்தனர்.

இலங்கையில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவில் மணிரத்னம் இயக்கிய ராவணன் படம் திரையிடப்படுவதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கையில் நடைபெறும் விழாவில் ராவணன் படத்தை திரையிடக் கூடாது, அந்த விழாவுக்கு மணிரத்னம் செல்லாமல் புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகள் ‌கோரிக்கை வைத்தன. இந்நிலையில் இலங்கை விழாவில் ராவணன் கலந்து கொள்ளாது என்றும், தானும் இலங்கை போகப்போவதில்லை என்றும் டைரக்டர் மணிரத்னம் அறிவித்தார்.

தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தாண்டி இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இந்திய சர்வதேச திரைப்படக் கழகமும் , இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பும் யும் இணைந்து நடத்திய ஐஃபா விருது வழங்கு விழாவும், அதனைத் தொடர்ந்து நடந்த வணிக ரீதியிலான மாநாடும் பெரும் தோல்வியில் முடிந்தது. இதனால் இலங்கை அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இன்று உலகம் முழுவதும் ராவணன் படம் வெளியானது. இந்நிலையில் இலங்கையில் மட்டகளப்பு பகுதியில் உள்ள சாந்தி திரையரங்கில் ராவணம் படம் வெளியானது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சிங்களர்கள் அந்த திரையரங்கின் திரையை கிழித்து கொளுத்தியுள்னர். படம் பார்க்க வந்த தமிழர்களை சிங்கள ராணுவத்தினரும் அடித்து விரட்டியுள்ளது. இதேபோல் யாழ்ப்பாணம் பகுதியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
thanks alaikal.com.
tags raavanan , manirathnam , srlanka , sinhalese rowdies



Post Comment

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP