பாலை விமர்சனம்
ஒரு போரில் வெல்ல வீரம் மட்டும் போதாது; சூதும் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் இயக்குனர். அது தெரியாத வேள்ளேந்தியாய் இருந்தததால் தான் நாம் முள்ளி வாய்க்காளில் பராரியாய் நிற்கின்றோம் இன்னும்.
இந்தக்கதையை படித்ததுமே உங்களுக்கு ஒரு இனத்தின் வரலாறு நினைவிற்கு வரக்கூடும்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக “அவங்க சிங்கம்... நாம புலி...” என்ற வசனம் வந்ததும் தான் கதை புரிய ஆரம்பித்து சீட்டில் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அதன் பிறகு வந்த காட்சியமைப்புகளை, வசனங்களை, போர் தந்திரங்களை அப்படியே வரிவரியாக எழுத வேண்டுமென்று அத்தனை ஆசையாக இருக்கிறது. இருந்தாலும் அதை திரையில் பார்க்கும்போது இன்னும் இன்னும் பரவசப்படுவீர்கள். எனவே தயவு செய்து இந்த படத்தை (தூக்குவதற்கு முன்பு) திரையரங்கிற்கு சென்று பார்க்கவும்.
தூங்கும் முயல் தன் காலடி ஓசை கேட்டு தூக்கம் கலைந்து விடக்கூடாது என மெல்ல அடியெடுத்து வைக்கும் தமிழினம் எதிரி இடத்தில் வல்லினமாய் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் படம்.
காஞ்சிவரத்தில் நடித்த ஷம்மு இதில் கதாநாயகி. ஆனால் கதையின் நாயகன் படத்தின் களம். தத்ரூபமான கள கலை அமைப்பு,ஒளிப்பதிவு நம்மை பழங்காலத்திற்கே இட்டுச் செல்வது உண்மை.
பாடல்கள் மூன்றும் அருமை.
பயங்கர ஷார்ப்பான வசனங்கள். “பிழைப்போமா... அழிவோமா... என்று தெரியாது. வாழ்ந்தோம் என்று பதிவு செய்ய விரும்புகிறோம்...” என்ற வசனத்தில் ஆரம்பித்து, “போரில் வெல்ல வீரம் மட்டும் போதுமானதல்ல... சூழ்ச்சியும் அவசியம்...” என்று தொடர்ந்து, “நாம் காலடி வைக்கும் ஒவ்வொரு அடி மண்ணுக்காகவும் நம் முன்னோர்கள் போராடியிருக்கிறார்கள்...” என்று முடிவது வரை நிறைய பளிச் டைப் வசனங்கள்.
இது மட்டுமில்லாமல் பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகள், சமூகநிலை, அவர்களின் காதல், காமம், திருமணம் செய்யும் முறை போன்றவற்றை போகிறபோக்கில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது பாலை.
காஞ்சிவரம் படத்தில் நடித்த ஷம்மு – காயாம்பூ என்ற பெண் போராளி பாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் கூட நடித்திருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. அதேபோல நாயகனாக நடித்திருக்கும் சுனிலும் தன் பங்கிற்கு சிலம்பம் கற்று, ஈட்டி எரியப் பயின்று படத்தில் நடித்திருக்கிறார்.
paalai movie review
"பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் ’இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’”- இயக்குனர் செம்மல் பாலு மகேந்திரா
பாலை - உண்மையிலேயே ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம்