ஒஸ்தி விமர்சனம்

ஒஸ்தி திரை விமர்சனம்
படம் :ஒஸ்தி
நடிப்பு : சிம்பு , ரிச்சா , மயில்சாமி மற்றும் பலர்
இசை : தமன்
இயக்கம் : தரணி
தயாரிப்பு : ரிலயன்ஸ்






கதை : ஒரே தந்தைக்கு பிறந்த இரண்டு தாய் மகன்களின் முறைப்புபோராட்டமும் பாச போராட்டமும் தான் கதை.

நாசரின் மனைவி ரேவதி தனது கணவர்(வேறு ஒருவர்) இறந்த உடன்சிம்புவுடன்,நாசரிடம் தஞ்சம் அடைகிறாள்.அவருக்கு பிறக்கும் மகன் ஜித்தன் ரமேஷ் இருவரும் சிறு வயதில்முட்டிக்கொள்வதும்
மோதி கொள்வதும் பின் அதே தொடர்கதையாகி பெரியவராகும்போது சிம்புலோக்கல் இன்ஸ்பெக்டர்,ரமேஷ் தனது தந்தையுடன் மில்லில் உதவியாக இருக்கிறார்.

அங்கே தேர்தலில் நிக்க போகும் வேட்பாளர் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய தனது ஆட்களிடம் பணத்தை கொடுத்தனுப்ப அதை லபக்குகிறார் சிம்பு.பணத்தைசிம்புவிடம் இருந்து திரும்ப பெற முயற்சிக்கும் வில்லனிடம் தன் புத்திசாலித்தனத்தால் தப்பிக்கிறார்.

பணம் கொடுக்காமல் இருப்பதை அறியும் மாவட்ட செயலாளர் விஜயகுமார்வில்லனை கண்டிக்க,அவர் சிம்புவின் தாயாரை கொள்கிறார்,மில்லை எரிக்கிறார்.நாசர் அதிர்ச்சியில்படுக்கைக்கு செல்ல
திணறும் ரமேஷை தன் வசமாக்கி தன் காரியங்களை சாதிக்கிறார்,விஜயகுமாரையும் கொல்கிறார்.

பின் சிம்புவை கொல்ல ரமேஷிடம் துப்பாக்கி கொடுத்து அனுப்ப அங்கே ரமேஷ் தன் தவறை உணர்ந்து அண்ணனிடம் சரண்டர் ஆக அவர்கள் இருவரும் எப்படி தங்கள் எதிரியை வென்றார்கள் என்பது தான் ஒஸ்தியின் கதை சுருக்கம்.

சிவாஜி தி பாஸ்,ஒஸ்தி தி மாஸ் என்று வசனம் பேசி தான் படத்தையேஆரம்பிக்கிறார்கள்.டபாங் ரீமேக் இல்லை இது டபாங்கின் தமிழ் டப் தான் இது.

படம் பார்த்துக்கொண்டே சில பேர் திட்டி கொண்டே இருந்தார்கள்...

காரணம்

முதல் : படம் மதியம் தான் வெளியானது காலையில் சென்ற விசில் குஞ்சுகள் எல்லாம் காத்திருக்க வேண்டியதாய் போயிற்று.

இரண்டாம் : அவ்ளோ நேரம் வெயிட் பண்ணி பார்க்கும் போது இருந்த எதிர்பார்ப்பு ,படத்தில் இல்லை என்பது தான்.

சிம்பு,படத்தின் மொத்த பலமே இவர் தான்.அந்த ஸ்டைல் போலீஸ் கெட் அப் இவருக்கு நன்றாக பொருந்திருக்கு.சண்டை காட்சியில் மறுபடியும் பறக்க ஆரம்பிச்சிட்டார்.நடனம் நல்லா ஆடுவார்னு எல்லார்க்கும் தெரிஞ்சது தான்.கொஞ்சம் ஓவராக ஸ்டைல்
பண்ணுவதை தவிர்த்திருக்கலாம்.தன்னை காவல்துறை என்று சொல்லிபேசுவது,கண்ணாடி மாட்டிக்கொண்டு அழுவது...நல்ல ஐடியா பாஸ்...!

ரிச்சா,தொப்புளுக்கு கீழ தான் உடை உடுத்தனும்னு சொல்லி தான் தரணிஅழைச்சிருப்பார் போல.மயக்கம் என்ன வை விட இதில் அதிகமாக அழகாக இருக்கிறார்.மற்றப்படி கதையில் பாட்டு வர சேர்க்கப்பட்ட உப்பு தான் இவர்.

ரமேஷ்,இந்த படத்தில் நடித்ததற்கு ஒரு கிளாப்ஸ்.வெகுளியாக இருப்பதும் தன்காதலிக்காக திருடுவதும் தாயிடம் மாட்டி உருகுவதும்,சிம்புவிடம் முட்டி கொள்வதிலும் பின் பாசம்காட்டுவதிலும்
இவர் தான் இந்த படத்தின் மற்றொரு பலம்.

நாசர்,ரேவதி,சரண்யா மோகன் எல்லாரும் தனக்கு கொடுக்கப்பட்டதை செய்துள்ளார்கள்.

சந்தானம்,மயில்சாமி,தம்பி ராமையா எல்லாரும் நகைச்சுவை பண்றங்கனு கடிகடினு கடிக்கிறாங்க. சந்தானம் இன்னும் தன் ஸ்டைலை மாற்ற முயற்சிக்கவேஇல்லை,எல்லாரையும் ஓட்டி தள்ளுகிறார்.
ரிச்சாவை சிரிக்க வைக்க கணேஷ் பாடும் சென்பகமே பாடலில் அனைவரும்சிரிக்கலாம்.

இசை - தமன்..பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்தாலும் பார்க்க இன்னும்ரசிக்கவே முடிகிறது. பிண்ணனி இசையை ஹிந்தி தபாங் பார்த்து போட்டுருக்கலாம் இன்னும்கொஞ்சம் எதிர்பார்த்தேன் தமன்.

கோபிநாத் காமிராவும்,வி.டி.விஜயனின் எடிட்டிங்கும் நம்மை படத்துடன் ஒன்றவைக்கிறது.

வசனங்கள் சில நம்மை மிகவும் ஈர்க்கின்றன..

அவைகள் சில

போதை போட்ற அப்பாவுக்கு பிறந்த போதை ஏத்துற பொண்ணு.

கண்ணாடி மாறிடா நான் , நீ எத செஞ்சாலும் திருப்பி செய்வேன்டா...

எவ்ளோ நாள் தான் கெட்டவனா நடிக்கிறது,மங்காத்தா விளயாடுறேன்(அஜித்ரசிகருள்ள)

உனக்கு என்ன வேணும்,அனகோண்டா முட்டை அரை டசன் கொடுடா...

குவார்ட்டர கருமாந்திரம் சொல்லாத தமிழ்நாடே கொந்தளிக்கும்
(உபயம் : விடிவிகணேஷ்)

கலெக்டர்னா தளபதி அரவிந்த்சாமினு நினச்சேன்....

கவர்மென்ட் ஆபிஸில் பணம் இருக்குறது ஜெட்டி போடாம புல் பாட்டிலைரெண்டு காலுக்கு நடுவில் வைப்பதற்கு
சமம்.

நான் ஒரு வோட்டு குத்துனா பத்தாயிரம் வோட்டு குத்துன மாதிரி...

அரைக்கு பயப்பட மாட்டேன் அன்புக்கு தான் பயப்படுவேன்.

கலவரத்துல நெருப்புக்கு அரசு வண்டி சாதா வண்டினு எதுவும் தெரியாது.

முதுகுக்கு பின்னாடி குத்துறவன் தான் அதிகம் அதான் முதுகில் கண்ணாடி,அதுஎன் மூணாவது கண்.

திரைக்கதை,இயக்கம் - தரணி.டபாங்கினை டப் செய்து கொடுத்திருக்கிறார்.படத்தின் கதை மட்டும் வைத்துக்கொண்டு புதுசா ஏதும் சொல்லுறேன்னு சொதப்பாம கொடுத்திருக்கிறார்.திரைக்கதையில்
சிறு தடுமாற்றம் இருப்பதை தவிர்த்திருந்தால் ஒஸ்தி யான வெற்றி பெற்றிருக்கலாம்.

ஒஸ்தி - பார்க்கலாம்



Post Comment

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP