லண்டனில் தமிழருக்கு ஆப்பு: 3 நிமிடத்துக்கு 1,100 பவுன்கள் கட்டணம் !


ஆகமொத்தத்தில் 1,100 பவுண்டுகளை அவர் கட்டவேண்டும் என்று கூறியுள்ளனர். சுமார் 1 மணிநேரமாக வாதிட்ட கனேஷ் இறுதியில் அவர்களிடம் பேசமுடியாது என்பதனை உணர்ந்து தனது வங்கி அட்டை மூலம் 1,100 பவுண்களைக் கட்டியுள்ளார். பிரைவேட் பாக்கிங் என்று குறிப்பிடப்பட்டுள்ள பலகை மறைக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும், அவ்விடத்துக்கு வரும் எந்த நபராலும் அந்தப் பலகையை சரிவரப் பார்க்க முடியாது என்றும் கனேஷ் தெரிவித்துள்ளார். 

இதனைக் கவனிக்காமல் எவராவது அவ்விடத்தில் பார்க் பண்ணினால் போதும், கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு அங்கே ஒளிந்து நிற்கும் வீல் கிளேம் போடும் நபர்கள் உடனடியாக வந்து வாகனத்தின் சில்லை கொழுக்கி போட்டுவிடுவார்கள்.

பிரித்தானியாவின் சட்டதிட்டங்கள் மாற்றமடைய இருக்கின்ற நிலையில், வீல் கிளேம் போடும் சட்டமும் தற்போது மாற்றப்பட உள்ளது என அறியப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் தனியார் கம்பெனிகள் அறவிட முடியாது என்ற சட்டம் தற்போது வரவுள்ளது. இச்சட்டம் எப்போது நடைமுறைக்கு வருமோ அப்போது தான் பிரித்தானிய வாகன ஓட்டுனர்கள் நிம்மதி அடைவார்கள். ஆனால் இச்சட்டம் அமுலுக்கு வருமுன்னர் எவ்வளவு காசை எண்டாலு கறந்துவிடவேண்டும் என சில் தனியார் கம்பெனிகள் அலைந்து திரிகின்றனர். தமிழர்களே ஜாக்கிரதை !

Tags - Parking fee ,Huge parking fee in London , Wheel claim parking fees in England



Post Comment

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP