சினிமா ஆசை காட்டி விபசாரத்தில் தள்ளிய பிரபல நடிகை கைது


சினிமா ஆசை காட்டி பெண்களை விபசாரத்தில் தள்ளியதாக பிரபல நடிகை தாரா சவுத்ரி கைது செய்யப்பட்டார்.

முன்னாள் முதல்வர் முதல் போலீஸ் டி.ஜி.பி. வரை அவருடன் தொடர்பு வைத்திருந்தது அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது



பிரபல தெலுங்கு நடிகை தாரா சவுத்ரி. அத்ருஸ்யம், ரக்ஷாகுடு, பிரியசகி, லவ் டிக்கெட் ஆகிய படங்கள் மூலம் இவர் பிரபலம் ஆனார். இந்தநிலையில் இப்போது இவர் மீது ஒரு பரபரப்பு புகார் எழுந்துள்ளது. பஞ்சாரா ஹில்ஸ் பகுதி போலீஸ் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தொண்டு அமைப்பு ஒன்றின் மூலமாக அந்த புகாரை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் அவர், "எனக்கு நடிகை தாரா சினிமாவில் வாய்ப்பு தருவதாக ஆசை காட்டினார். அதன்பேரில் என்னை வரவழைத்து, விபசாரத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தினார். அவரிடம் இருந்து தப்பி வந்து இந்தப் புகாரை அளிக்கிறேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

அந்தப் புகாரின் மீது பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து நடிகை தாராவை கைது செய்து, முதற்கட்ட விசாரணைக்கு பின் நம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் வைத்தனர்.

தாராவிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவரது பல லீலைகள் வெளியாகின. அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களையே ஆட வைத்திருக்கிறது இந்த நடிகையின் தொடர்புகள்.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கம்மவாரிபாலத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. தாரா சவுத்ரி என்ற பெயருடன் அவர் தெலுங்கு படவுலகில் நுழைந்தார். பல சிறிய பட்ஜெட் படங்களில் நடித்தார். அதன் பின்னர்தான் அவர் தனது லீலைகளை அரங்கேற்ற தொடங்கினார்.

சினிமா ஆசை காட்டினார்

இளம் அழகிகளை சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடித்தருவதாக ஆசை காட்டி அழைத்து வந்து, அவர்களை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தினார். தாராவிடம் எம்.பி., உள்ளிட்ட அரசியல்வாதிகள், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி., பணியில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு, ஆந்திர தொழில் அதிபர், பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய புள்ளிகள் என சமூகத்தின் மேல்மட்டத்தில் உள்ள பலரும் வாடிக்கையாளர்கள் ஆனார்கள்.

அவர்களுக்கு விதவிதமான அழகிகளை சப்ளை செய்து, பணத்துடன் அவர்களின் நம்பிக்கையையும் சம்பாதித்தார்.

படம் பிடித்து பணம் பறிப்பு

அழகிகளுடன் வி.ஐ.பி.க்கள் செக்ஸ் லீலையில் இருக்கும்போது அதை ரகசியமாக படம் பிடித்தார். அந்தப் படக் காட்சிகளை சம்மந்தப்பட்ட வி.ஐ.பி.க்களுக்கு காட்டி, மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்தார். அது மட்டுமல்ல. அதிகார வர்க்கத்தினர் என்றால் அவர்களிடம் இருந்து பல காரியங்களை சாதித்துக்கொண்டார்.

பல அரசியல்வாதிகள் தாராவிடமிருந்து அழகிகளை வரவழைத்து, தாங்கள் காரியங்கள் சாதிப்பதற்காக உயர் அதிகாரிகள், மேலிட அரசியல் தலைவர்களுக்கு சப்ளையும் செய்துள்ளனர்.

பெங்களூரிலும் விஸ்தரிப்பு

பணமும், பெயரும் குவிந்தது. பெங்களூரில் நடிகை தாரா பெரிய பங்களா ஒன்றை வாங்கினார். அந்த பங்களாவிலும் தனது விபசார தொழில் எல்லையை விஸ்தரித்தார். பஞ்சாராஹில்ஸ் பகுதியில் ஒரு விருந்தினர் மாளிகையும் இவருக்கு இருக்கிறது.

நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த தாரா தவறவில்லை. இணைய தள ஆர்வலர்களை கவர்ந்திழுக்க அதன் வாயிலாக உல்லாசத்துக்கு அழைப்பு விடுத்து, வாடிக்கையாளர்களை பெற்றார்.

ராஜசேகர ரெட்டியுடன் போட்டோ

இந்தத் தகவல்கள் எல்லாம் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தாராவிடமிருந்து லேப்டாப் கம்ப்யூட்டர், ரகசிய கேமரா, ரகசிய டைரி, ஒரு பெட்டி நிறைய ஆணுறைகள், 8 செல்போன்கள், முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியுடன் எடுத்துக்கொண்ட போட்டோ, 8 செல்போன்கள், 21 சிம் கார்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த ரகசிய டைரியில் பல பிரபலங்களின் போன் எண்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு ஆடியோ கேசட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த ஆடியோ கேசட்டில் ஒரு பிரபல தொழில் அதிபரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதும், அவரிடம் ரூ..5 லட்சம் கேட்டதும் பதிவாகி உள்ளது.

போலீஸ் காவலுக்கு மனு

இந்த நிலையில் நம்பள்ளி கோர்ட்டில் அவரை ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை அரசு தரப்பு வக்கீல் தாக்கல் செய்து கூறுகையில், "நடிகை தாராவை விரிவாக விசாரிக்க வேண்டி உள்ளது. அவர் மறைந்த முதல்வர் டாக்டர் ராஜசேகர ரெட்டியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் படத்தை வைத்து அவர் தனது வாடிக்கையாளர்கள், பாதிப்புக்குள்ளானோரை மிரட்டி இருப்பதாக தெரிய வருகிறது. இதுகுறித்தெல்லாம் அவரிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. எனவே அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தர வேண்டும்,'' என்றார்.

நடிகை தாராவை போலீஸ் காவலில் வைப்பது தொடர்பான மனு மீதான விசாரணையை நம்பள்ளி கோர்ட்டு நீதிபதி 10-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்துள்ளார். இதற்கிடையே உளவுத் துறையினர் நடிகை தாரா பற்றிய தகவல்களை சேகரிக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது

Tollywood actress Tara Chowdary was arrested by Banjara Hills police on Saturday for allegedly cheating gullible girls by promising them jobs but later turning them into prostitution.



Post Comment

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP