இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் -கருணாநிதி


தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் சுதந்திரமாகவும், நிரந்தரமாகவும் தங்குவதற்கும், வாழ்வாதாரத்துக்குமான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து தர வேண்டும் என தமிழக முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில், முதலமைச்சர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது .

நான் இங்கு நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் தம்பி ஸ்டாலின் முன்மொழிந்து வழிமொழியப்பட்டு 8-வது தீர்மனமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தேயே முக்கிய தீர்மானமாக கருதுகிறேன்.

அது இலங்கை தமிழ் மக்களை பற்றிய தீர்மானம். இலங்கை தமிழர் இங்கு நாம் நாட்டில் அகதியாக உள்ளனர். இலங்கையிலும் அங்கு வசிக்கும் மக்கள் அகதிகளாக்கப்பட்டு கூடாரத்தில் துன்பங்களை ஏற்றுக்கொண்டு அவதிப்படுகிறார்கள். ஆனால் அவர்களை சொல்லவில்லை. அவர்கள் வேறு நாட்டில் வசிக்கிறார்கள். அவர்கள் கூடாரத்தில் இருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும். சொந்த இடத்திற்கே அவர்கள் போக வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். இந்திய அரசுடன் சேர்ந்து கொண்டும் குரல் கொடுக்கிறோம். அதை வலியுறுத்தி கொண்டும் வருகிறோம்.

அதே நேரத்தில் தமிழகத்தில் கடந்த 10, 20 ஆண்டுகளாக இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து குடியேறிய மக்களின் கதி என்ன? என்பது தான் எட்டாவது தீர்மானம் ஆகும். அதில் நாம் அமைத்த வாக்கியங்களை தீர்மானம் நிறைவேற்றும் போது யாரும் கவனிக்காமல் இருந்தால் கவனம் ஊட்டுகிறேன். 1984 முதல் தமிழகத்திற்கு இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த மக்களை தமிழக அரசு 17 இடங்களில் உள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளது. தற்போது 115 முகாம்களில் 73 ஆயிரத்து 572 இலங்கை தமிழர் அகதிகள் தங்கியுள்ளனர். இது மட்டுமின்றி 38 ஆயிரம் இலங்கை தமிழர்கள் முகாம்களில் தாங்காமல் பல்வேறு இடங்களில் சொந்த பொறுப்பில் தங்கியுள்ளனர். மொத்தத்தில் தமிழகத்தில் 1 லட்சம் இலங்கை தமிழ் அகதிகள் தங்கியுள்ளனர். 1984 முதல் உள்ள புள்ளி விவரம் இது.

தி.மு.க. பொறுப்பு ஏற்றவுடன் 1.2.2006 முதல் மத்திய மாநில அரசுகள் இணைந்து அகதிகளுக்கு வழங்கி வரும் உதவி தொகை உயர்ந்தப்பட்டுள்ளது. அகதி குடும்ப தலைவருக்கு வழங்கப்பட்டு வந்த 200 ரூபாயில் இருந்து 400 ரூபாய் என்றும், வயது வந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவி தொகை 144 ரூபாயில் இருந்து 288 ரூபாயகவும், முதல் குழந்தைக்கு 90 ரூபாயில் இருந்து 180 ரூபாய் ஆகவும் மற்ற குழந்தைகளுக்கு 45-லிருந்து 90 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கிலோ அரிசி 57 காசுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அகதிகள் குழந்தைகள் மேல் நிலை வகுப்பு வரை இலவச கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மேல் படிப்பு படிக்கவும் வாய்ப்பு தரப்படுகிறது.

இந்த தீர்மானம் என்ன சொல்லுகிறது? இலங்கை தமிழ் அகதிகளை இந்திய குடியுரிமை சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களுக்கு உட்பட்டு இங்கு குடியமர்த்த செய்ய வேண்டும்.

மறுகுடி அமர்த்தும் சட்டமாக மத்திய அரசுடன் கலந்து பேசி வழிவகை செய்துகொள்ள வேண்டும். அவர்கள் தமிழகத்திலே வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சராக, தி.மு.க. தலைவராக இந்த முப்பெரும் விழா வாயிலாக நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று என்னையே நான் கேட்டுக்கொள்ளும் தீர்மானம்.

என்னை நான் கேட்டுக்கொண்டதால் இந்த தீர்மானம் நிறைவேறா விட்டால் என்னை விட ஏமாளி யாரும் இல்லை. இந்த தீர்மானம் நிறைவேறுவதற்கு மத்திய அரசை வலியுறுத்த இருக்கிறோம். இதை சட்ட ரீதியாக, அமைதியாக பெற இருக்கிறோம். மத்தியில் உள்ளவர்கள் இந்த தீர்மானம் நிறைவேற உதவ வேண்டும்.

இந்தத் தீர்மானம் நிறைவேறும் வேளையில் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களில் வாழ்வாதாரம் மேம்படும் என்பதில் அய்யம் இல்லை .மேலும் இலங்கைத் தமிழர்களிடம் தன் செல்வாக்கை மீட்டு எடுப்பாரா என்பது போகப் போகப் தெரியும்

.



Post Comment

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP