ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு திடீரென ஒத்திவைப்பு
கோவையில் எதிர்வரும் சனவரி மாதம் நடைபெறவிருந்த ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை 9வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
இதன்பின்னர் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் மத்தியில் இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுத்துள்ளன.
இதனைத் தொடந்து உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் நடந்த குழுக் கூட்டத்தில் தமிழ் அறிஞர்கள் கட்டுரைகள் தயாரிக்க கால அவகாசம் தேவை என்பதைக் காரணம் காட்டி சனவரி மாதம் நடைபெறவிருந்த மாநாட்டை நிறுத்தி அதனை யூலை மாதம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
.