விஜய் மாதிரி மனசு இருந்துட்டா நாங்க நடிக்கவே வரமாட்டோம்...


நடிக்க வரும் இயக்குநர்கள் எல்லாரும் நடிகர்கள் கால்ஷீட் கொடுக்காததால் நானே நடிக்க வந்துவிட்டேன் என்கிறார்கள்.



அப்படித்தான் இயக்குநர் தருண்கோபியும் சொல்லிவருகிறார்.

நந்தி பட விழாவில் பேசிய அவர், ‘’ நடிகர்கள் சில பேர் பண்ணுன வேலையாலதான் நடிக்க வந்தேன்.

மாயாண்டி குடும்பத்தார் படம் நல்லா போச்சு. ஆனாலும் ஒரு நடிகர் கூட பாராட்டு தெரிவிக்கல.

பாடாட்டலன்னா கூட பரவாயில்ல. சில பேரு செய்த வேலை இருக்கே....அத சொல்றதுக்கு எனக்கே பிடிக்கல...’’என்று சொல்லிவிட்டு சிறிது இடைவெளி விட்டவர்,


‘’வேட்டைக்காரன் ஷூட்டிங்கில் விஜய்யை பார்க்கப்போனேன். என்னைப்பார்த்ததுமே கலக்குறீங்னா...உங்க படம்தான் இப்போ டாப்புல இருக்குன்னு பாராட்டுனாரு.

அவரோட நல்ல மனசு எந்த நடிகருக்கும் வராது. அவர் மாதிரி மனசு மத்த ஹீரோக்களுக்கும் இருந்துட்டா நாங்க நடிக்கவே வரமாட்டோம்.

சில ஹீரோக்கள் பண்ணுற அட்டூழியத்தாலதான் வரவேண்டியதாயிருக்கு’’என்றார்.



Post Comment

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP