ரூ.2,999 விலையில் வரும் ஆகாஷ் tablet - வாங்குவதற்கு போட்டா போட்டி

ஆகாஷ் டேப்லட் இந்திய மொபைல் சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறது. டாடா நானோ காருக்கு பிறகு இந்தியாவில் இந்த ஆகாஷ் டேப்லெட்டைப் பற்றிய பேச்சு பரவலாக அடிபட்டு வருகிறது. இதுவரை இந்த டேப்லெட் வங்குவதற்காக 3 லட்சத்திற்கும் அதிகமானோர் காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றனர்.

இந்த ஆகாஸ் டேப்லட்டின் விலை ரூ.2999 மட்டுமே என்பதால் காத்திருப்போர் பட்டியல் பல லட்சமாக நீள்கிறது. மேலும் இது அடுத்த மாதத்தில் சந்தைக்கு வரும் என்று தெரிகிறது. தற்போது இந்த டேப்லெட் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் அகாஷ் 2 என்ற புதிய மொபைலையும் அந்நிறுவனத்தார் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிருக்கின்றனர். இந்த ஆகாஷ் 2 மேலும் நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கும். அந்த புதிய டேப்லெட்டும் மார்க்கெட்டில் பல மாற்றங்களைக் கொணடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய டேப்லெட் 7 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வரும் என்று தெரிகிறது. அதில் உள்ள மைக்ரோப்ராசஸர் மற்றும் ரேம் ஆகியவை பல மாற்றங்களும் வரவிருக்கின்றன.
ஆகாஸ் 256எம்பியுடன் கூடிய 336 மெகாஹெர்ட்ஸ் ப்ராசஸர் கொண்டு வருகிறது. ஆனால் ஆகாஷ் 2 டேப்லெட்டின் ரேம் 1 ஜிபி திறன் கொண்டதாக இருக்கும். அதே நேரத்தில் அது 800 மெகாஹெர்ட்ஸ் ப்ராசஸர் கொண்டுள்ளது. எனவே, அது மிக வேகமாக இயங்கும்.
மேலும், ஆகாஷ் டேப்லட்டை அடுத்து வரும் ஆகாஷ்2 டேப்லெட் எந்த குறைகளும் இல்லாமல் இருக்கும். இது புதிய நவீன் டச் வசதிகளுடன் வருகிறது. இதன் விலையைப் பற்றி இன்னும் தகவல் வரவில்லை.
இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த மலிவு விலை டேப்லெட்டுகள் இந்தியாவில் ரிலையன்ஸ் மற்றும் பீட்டெல் நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் ஏற்கனவே ஆகாஷ் டேப்லெட் ஐஐடி மாணாக்கருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ஆகாஷ் டேப்லட்டுகள் உலகத்தின் செல்லக் குழந்தைகள் என்ற அழைக்கப்படுகின்றன.



Post Comment

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP