பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் பிரசாந்தின் வழக்கு

கடந்த பல வருடங்களாக பிரசாந்த் குடும்பத்தில் பேயாட்டம் ஆடி வந்த பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கிறது. அதிகப்படியாக வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாக பிரசாந்த்தை கோர்டுக்கு இழுத்தார் அவரது மனைவி கிரகலட்சுமி. அப்புறம் தன்னந்தனியாக புலனாய்வு செய்த பிரசாந்த் (ஹீரோவாச்சே) கிரகலட்சுமி ஏற்கனவே திருமணமானவர் என்பதை கண்டுபிடிக்க, அதன் பின் நடந்தது எல்லாமே தலைகீழ் ஆட்டம்.



பிரசாந்த் முன்ஜாமீன் வாங்க அலைந்தது போக, ஓடி ஒளிய வேண்டிய நிலைக்கு ஆளானார் கிரகலட்சுமி. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்பதை நிரூபிக்க தனி வழக்கு போட்ட பிரசாந்த், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இந்த வழக்கின் தன்மையை முதலில் இருந்தே பார்ப்போம்.

நடிகர் பிரசாந்த்-கிரகலட்சுமி திருமணம் 2005-ம் ஆண்டு நடைபெற்றது. கிரகலட்சுமி ஏற்கனவே திருணமானவர் என தெரியவந்ததும் 2007-ம் ஆண்டு பிரசாந்த் கிரகலட்சுமியை விட்டு பிரிந்தார். திருமணம் செல்லாது என அறிவிக்க 2009-ல் குடும்ப நல நீதிமன்றத்தில் பிரசாந்த் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த்- கிரகலட்சுமி திருமணம் செல்லாது என தீர்ப்பு கூறினர்.

அதைத் தொடர்ந்து தன்னை பிரசாந்துடன் இணைத்து வைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்மனு இன்று தள்ளுபடி செய்து குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர்



Post Comment

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP