என் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்
என் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவிப்பாக சேர்த்துள்ளது தவறு என்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசராணை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் கடந்த அக்டோபர் மாதம் 21,22 மற்றும் நேற்றும், இன்றும் ஆஜரான முதல்வர் ஜெயலலிதா இந்த வழ்ககு தொடர்பான 1,339 கேள்விகளுக்கு பதில் அளித்தார். இத்துடன் ஜெயலலிதாவிடம் விசராணை முடிந்துள்ளது.
இன்று ஆஜரான ஜெயலலிதா 192 கேள்விகளுக்கு பதில் அளித்ததுடன் எழுத்துப்பூர்வமான விளக்கமும் தந்துள்ளார்.
விசாரணையின் போது ஜெயலலிதா கூறியது குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா விளக்குகையில்,
மக்கள் மத்தியில் எனக்கு இருக்கும் மதிப்பைக் குறைக்கவே இந்த சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு. இது குறித்து ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கொடுத்த புகார் தவறானது.
நான் அந்த காலத்தில் 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். அப்படி நடிக்கையில் வகை, வகையான சேலைகள், அதற்கு மேட்சிங்காக செருப்புகள், நகைகள் எல்லாம் வாங்கினேன். சினிமாவில் ஒரு முறை பயன்படுத்தியதை மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள்.
அப்படி நான் நடிக்கும் காலத்தில் வாங்கிய பொருட்களை எல்லாம் சொத்துகுவிப்பு வழக்கில் சேர்த்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர்கள் மாதவன் மற்றும் ஆற்காடு வீராசாமி ஆகியோர் இந்த வழக்கு விசாரணையில் தலையிட்டு வழக்கை திசைதிருப்ப முயன்றனர். போயஸ் கார்டனில் உள்ள வீட்டைத் தவிர நான் வேறு எந்த சொத்தையும் வாங்கவில்லை.
அரசு அதிகாரிகளை நான் என் சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்தினேன் என்ற கலெக்டரின் சாட்சியமும் பொய்.
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் எனது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தின்போது இசை நிகழ்ச்சி நடத்தினார். ஆனால் அவர் அதற்கு பணம் எதுவும் வாங்கவில்லை. மேலும் இந்த சொத்து குவிப்பு தொடர்பான நல்லம்ம நாயுடுவின் விசாரணையும் உண்மையன்று என்று ஜெயலலிதா கூறியதாக ஆச்சார்யா தெரிவித்தார்.