யாழில் மாணவருக்கு பாடம் நடத்தும் இராணுவத்தினர் - காலம் போற போக்க பாருங்க

யாழ்.மாவட்டப் பாடசாலை மாணவர்கள் 1600 பேருக்கு பலாலி படையினரின் ஏற்பாட்டில் விசேட பாடப் பயிற்சி பட்டறைகள் நடைபெற்றுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.தர சாதாரணப் பரீட்சையில் இம் மாணவர்கள் தோற்றவுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.
யாழ்.கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் மாணவர்களுக்கான இந்தப் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்றன. இந்தப் பயிற்சி பகுப்புக்களில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 27 பாடசாலைகளின் 1600 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்புக்களில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கான பயிற்சியை நடத்தியபோதும் இராணுவ உயர் அதிகாரிகள் சிலர் அவ்வப்போது குறுக்கிட்டு தமது கருத்துக்களையும் தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் சிலர் இராணுவத்தினரின் இந்த பயிற்சி வகுப்புக்கு பொரும் தொகையான மானவர்கள் கலந்து கொண்டது இது முதல் தடவை எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இராணுவச் சீருடையில் மாணவர்களுக்கு மத்தியில் அலைந்து திரிந்த சில அதிகாரிகள் மாணவிகளுடன் பகிடி விட்டுச் சிரிக்கவும் தவறவில்லை. தம்மை ஒரு பெரிய ஹீரோவாகக் காட்டிக் கொண்டு தாமே தமிழர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் உயர்ந்த மனிதர்கள் என்பது போன்ற செயல்பாட்டில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாக அங்கே சென்ற ஆசிரியர்களில் ஒருவர் அதிர்வுக்கு தெரிவித்தார். உலகில் பல நாடுகள் இலங்கை இராணுவம் புரிந்த போர் குற்றங்கள் விசாரிக்கப்படவேண்டும் எனக் கோரிக்கைகளை முன்வைக்கப்படும் நிலையில், இவர்களா தமிழ் மாணவர்களுக்கான கல்வித் திட்டங்களை முன்னெடுப்பது என்பது பெரும் அதிருப்த்திகளை ஏற்படுத்தியுள்ளது.


தாம் நடத்திய இந்தப் பட்டறையை பல மணிநேரமாக வீடியோவில் பதிவுசெய்து அதனை இராணுவத்தினர் இறுதியாக எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வீடியோவானது இலங்கைக்கு ஏற்ற சர்வதேச பரப்புரைகளை மேற்கொள்ள ஏதுவான வீடியோவா அமையும் என்பதிலும் ஐயமில்லை.நன்றி அதிர்வு



Post Comment

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP