கோவணம் அணிந்து குஷ்பு வீடு முன் போராட்டம் - இ.ம.க. சவால்

நமீதாவை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும். அவர் குட்டை பாவாடை அணிவதை எப்போதும் விரும்புவார். அதோடு கூடவே ஒரு துண்டையும் எடுத்துச்செல்வார்.

ஒருத்தர் அணியும் ஆடை என்பது அவரது தனிப்பட்ட வசதியையும் விருப்பத்தையும் பொருத்தது. மற்றவர்கள் உத்தரவு போட முடியாது. சினிமாவில் இருப்பவர்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை. வெளியில் உள்ள சில சுயநல சக்திகள் இரண்டு நிமிட புகழுக்காக எதிர்ப்பு காட்டுகின்றன என்று குஷ்பு கூறியிருந்தார்.


குஷ்பு கருத்துக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக கலாசாரம் பண்பாட்டுக்கு முன்னோடியான மாநிலம், அதனால் தான் கற்புக் கரசியான கண்ணகிக்கு சிலை வைத்துள்ளோம். குஷ்பு சொல்வது போல் இரண்டு நிமிட புகழுக்காக குட்டை பாவாடை அணியும் நடிகைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சினிமாவில் அதுபோல் அணியலாம். பொதுவிழாக்களுக்கு அதுபோல் வரக்கூடாது என்கிறோம்.

கிராமத்தில் விவசாய வலி தொழிலாளர்கள் பலர் கோவணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்கின்றனர். அதுபோல் கோவணம் அணிந்து கொண்டு 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் அவர்களை குஷ்பு சந்திப்பாரா? அல்லது பேசத்தான் செய்வாரா? அதுபோலத்தான் நடிகைகள் கவர்ச்சி ஆடையில் பொது விழாக்களில் பங்கேற்பதை நாங்கள் பார்க்கிறோம். அதை எதிர்க்கிறோம். அத்தகு நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கி எங்களை எதிர்ப்பதை குஷ்பு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.



Post Comment

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP